நெல்சாகுபடியில் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


நெல்சாகுபடியில் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
x

நெல்சாகுபடியில் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூர்

தளி,

நெல்சாகுபடியில் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அமராவதி அணை

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகி வருகின்ற ஆறுகளைத் தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மாநிலத்தில் உள்ள மூணார் மறையூர் பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது.அத்துடன் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றாறுகளும் ஓடைகளும் அணைக்கு கை கொடுத்து உதவி வருகிறது. இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு, ராமகுளம்- கல்லாபுரம் வாய்க்கால் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.அதுதவிர சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஆறு மற்றும் கால்வாய்களை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சாகுபடி

அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடியே பிரதானமாகும். அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொருத்து சாகுபடி செய்யப்படுகிறது. 2- ம் போக நெல் சாகுபடியில் ஆட்கள் பற்றாக்குறை, குலை நோய்த் தாக்குதல், காட்டுப்பன்றிகள் அட்டகாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த அளவு விளைச்சலை ஈட்ட முடியவில்லை.

. இதனால் நெல் சாகுபடியை கைவிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளோம். அதுமட்டுமின்றி குத்தகைதாரர்கள் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத சூழல் உள்ளது.

இதை சாதகமாக கொண்ட இடைத்தரகர்கள் குழு அமைத்து கொண்டு விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு நெல்லை வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே ராமகுளம்- கல்லாபுரம் வாய்க்கால் பாசனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் பெற்றுத் தந்து உதவ வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

----


Next Story