ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான யோகா போட்டியில் 350 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.


ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான யோகா போட்டியில் 350 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
x

ஈரோட்டில் மாநில அளவிலான யோகா போட்டி; 350 மாணவ -மாணவிகள் பங்கேற்பு

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான யோகா போட்டியில் 350 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

யோகா போட்டி

மாநில அளவிலான யோகா போட்டி ஈரோட்டில் நேற்று நடந்தது. மகா சித்தர் போகரின் ஜெயந்தியை முன்னிட்டு, கோவை போகா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த போட்டியை அறக்கட்டளை நிறுவனர் போகானந்தா தொடங்கி வைத்தார்.

இதில் ஈரோடு, சேலம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் யோகா போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

பரிசளிப்பு விழா

1 வயது முதல் 3 வயது வரை உள்ளவர்கள், 4 வயது முதல் 6 வயது வரை உள்ளவர்கள், 7 வயது முதல் 9 வயது வரை உள்ளவர்கள், 10 வயது முதல் 12 வயது வரை உள்ளவர்கள் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவில், ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன.

போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் போகா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி, யுனிவர்ஸ் யோகா அகாடமி நிறுவனர் கார்த்திகேயன், பதஞ்சலி யோகாசன இயக்குனர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Related Tags :
Next Story