பள்ளி மாணவர்களுக்கு யோகா விழிப்புணர்வு


பள்ளி மாணவர்களுக்கு யோகா விழிப்புணர்வு
x
தினத்தந்தி 22 Jun 2023 12:45 AM IST (Updated: 22 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

உப்புக்கோட்டை அருகே பள்ளி மாணவர்களுக்கு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தேனி

உப்புக்கோட்டை அருகே உள்ள பாலார்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி மாணவர்களுக்கு யோகா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் யோகாவின் மகத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் அறிவு திருக்கோவில் அறக்கட்டளை, மனவளக் கலை யோகா பயிற்சியாளர் கலந்துகொண்டு 10-க்கும் மேற்பட்ட யோகா பயிற்சிகளை கற்று கொடுத்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story