யோகா விழிப்புணர்வு ஊர்வலம்


யோகா விழிப்புணர்வு ஊர்வலம்
x

சீர்காழியில் யோகா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

மயிலாடுதுறை

சர்வதேச யோகா தினத்தையொட்டி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர். முன்னதாக யோகா குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியை அறிவுடைநம்பி, ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் ஈ.வே.ரா. சாலை, பழைய பஸ் நிலையம் வழியாக தேர் வடக்கு வீதியை அடைந்தது. ஊர்வலத்தின்போது யோகா செய்தவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலத்தில் நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






Next Story