யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி


யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

பாளையங்கோட்டையில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

ஆண்டு தோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அரசு சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நெல்லை தேசிய மாணவர் படை 5-வது பட்டாலியன் அணி சார்பில் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிதிஷ்குமார் தலைமையில் யோகா பயிற்சியாளர் சுதா நேற்று பொதுமக்களுக்கு யோகாசனங்கள் கற்றுக்கொடுத்தார். மேலும் உடற்பயிற்சி மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.


Related Tags :
Next Story