நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தின விழா


நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தின விழா
x

தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் நீதிபதிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

தர்மபுரி

சர்வதேச யோகா தினம்

தர்மபுரி மாவட்ட நீதிமன்றம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவற்றின் சார்பில் சர்வதேச யோகா தின விழா மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் ஒப்புதலுடன் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த யோகா முகாமை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) முனுசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விபத்து வழக்குகள் தீர்ப்பாய மாவட்ட நீதிபதி மணிமொழி, மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டு நீதிபதி சையத் பக்ரத்துல்லா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜா, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி, தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கணேசன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் சார்பு நீதிபதி கலைவாணி உள்பட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

நீதிபதிகள் பாராட்டு

இந்த முகாமில் தர்மபுரி, பாரதிபுரம் மனவளக்கலை மன்றங்களை சேர்ந்த யோகா பேராசிரியர்கள், பூபதி, சுப்பிரமணியன், தணிகைநாதன் மற்றும் யோகா பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்கள், சூரிய நமஸ்காரம், நாடி சுத்தி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகளை செயல்முறை விளக்கத்துடன் அளித்தனர். யோகா பயிற்சிகளை அளித்தவர்களுக்கு இந்த முகாமின் முடிவில் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story