மகாலட்சுமி நர்சிங் கல்லூரியில் யோகா தினம்
ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரியில் யோகா தினம் நடந்தது.
ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள ஆற்காடு மகாலட்சுமி நர்சிங்கல்லூரி மற்றும் நர்சிங் பள்ளியில் சர்வதேச யோகா தினம், இசை தினம், உலக மனிதநேய தினம் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிகளுக்கு லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் பாலாஜி லோகநாதன் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை மாஸ்டர் டாக்டர் லீ, யோகா பயிற்சி அளித்தார்.
இசை குறித்தும் மனித நேயம் குறித்தும் விஜய், கோட்டீஸ்வரன் ஆகியோர் பேசினர். கல்லூரி மாணவிகள் திமிரி ஆரம்ப சுகாதார நிலையம், ராணிப்பேட்டை, புதுப்பாடி, ஆற்காடு பகுதிகளில் ேயாகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் நர்சிங் கல்லூரி முதல்வர் சி.எஸ்.சிவசக்தி, துணை முதல்வர் ஞானதீபா உள்பட ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் சாந்தி பாலாஜி, தாளாளர் பா.கோமதி, இணை செயலாளர் பி.வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர்.