தென்காசி இசக்கி விஷ்யாஷ்ரம் பள்ளியில் யோகா தினம்


தென்காசி இசக்கி விஷ்யாஷ்ரம் பள்ளியில் யோகா தினம்
x

தென்காசி இசக்கி விஷ்யாஷ்ரம் பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

தென்காசி

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் சுமார் 600 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். பள்ளி முதல்வர் மோனிஷா டிசோசா யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கி பேசினார். அலுவலக செயல் இயக்குனர் ராம்குமார் தலைமை தாங்கினார். யோகா ஆசிரியர் சின்னம்மாள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாலமுருகன், ஸ்டீபன், ரவி அருண், அபிதா தேவி, சோபியா மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Next Story