பள்ளிகளில் யோகா தினம்
பள்ளிகளில் யோகா தினம் கொண்டாடப்பட்டது
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் தவமணி தலைமை தாங்கினார். மாணவர்கள் யோகாசனங்களை செய்து காட்டினார்கள். பள்ளியின் சிறப்பு ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், சங்கர சுப்பிரமணியன் மற்றும் இயன்முறை மருத்துவர் புனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
* சுரண்டை எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ராஜா யோகா சென்டர் பிரஜபிதா பிரம்மா வித்யாலயா சார்பில் யோகா மற்றும் தியான பயிற்சி சிறப்பு உரையாடல் நடைபெற்றது. இதில் குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா ஆகியோா் கலந்து கொண்டனா். இதில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.