பாஞ்சாலங்குறிச்சி அஞ்சலக ஊழியர்கள் சார்பில் யோகாதின நிகழ்ச்சி
பாஞ்சாலங்குறிச்சி அஞ்சலக ஊழியர்கள் சார்பில் யோகாதின நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம்:
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் சுற்றுலா மையத்தில் தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சலக ஊழியர்கள் சார்பில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியர்கள் யோகா நிககழ்ச்சியில் கலந்துகொண்டு யோகா செய்தனர். இதில் தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், உதவி கோட்ட கண்காணிப்பாளர் குமரன், பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கமலாதேவி, வீரசக்கதேவி ஆலய குழுத்தலைவர் முருகபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் சுற்றுலா மையத்தில் தூத்துக்குடி தனியார் பள்ளி மாணவ,மாணவிகள் சார்பில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
Related Tags :
Next Story