பழனியில் யோகா போட்டி


பழனியில் யோகா போட்டி
x

பழனியில் உள்ள பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில் யோகா போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட யோகா சங்கம் மற்றும் பழனியாண்டவர் கலைக்கல்லூரி சார்பில் யோகா போட்டி, பழனியாண்டவர் மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். சித்தா டாக்டர் மகேந்திரன், கல்லூரி பேரவை துணைத்தலைவர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பழனி மெய்த்தவ சபை அடிகளார் கலந்துகொண்டு, சூரிய நமஸ்காரத்தின் சிறப்புகள் குறித்து பேசினார். இந்த யோகா போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு, பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். இதற்கான ஏற்பாடுகளை யோகா ஆசிரியர் சிவகுமார் மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கலையரசி ஆகியோர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story