மாவட்ட அளவிலான யோகாசன போட்டி


மாவட்ட அளவிலான யோகாசன போட்டி
x
திருப்பூர்


முத்தூர் ஆனூர் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.

யோகாசன போட்டி

காங்கயம் பதினெண் சித்தர்கள், முத்தூர் திருமூலர் வாழ்வியல் மையம் ஆகியவை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான யோகாசன போட்டி முத்தூர் வாய்க்கால் மேட்டுபுதூர், ஆனூர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆனூர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே.எஸ்.சிவசேனாபதி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் கே.எஸ்.அரவிந்த் நல்லதம்பி முன்னிலை வகித்தார்.

யோகாசன போட்டியை யோகா ஆசிரியர் காங்கயம் காளியப்பன் தொடங்கிவைத்தார். ஈரோடு கொங்கு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் எஸ்.வி.ராஜரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு யோகாசனத்தின் பயன்கள் வாழ்வியல் ஒழுக்க நிலைகள், யோகா மூலம் உடல், மனம், நலம், ஆரோக்கியம், தன்னம்பிக்கை மேம்பாட்டு வழிமுறைகள் பற்றி மாணவ-மாணவிகளுக்கு விளக்கினார்.

மாணவ-மாணவிகளுக்கு பரிசு

விழாவில் திருப்பூர், ஈரோடு, கோவை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த யோகா பயின்ற மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது யோகாசன பயிற்சி திறன்களை வெளிப்படுத்தினர். மாவட்டங்களில் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு கேடயம், பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

விழாவில் முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி முதல்வர் எஸ்.பி.சரவணன், ஆனூர் பள்ளி முதல்வர், ஸ்ரீஆனூர் பள்ளி முதல்வர் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த யோகாசன மாணவர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் யோகா ஆசிரியர் பி.இளங்கோ நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை யோகாசன ஆசிரியர்கள் ஆர்.ஜெகநாதன், என்.நல்லசிவம், ஆர்.கண்ணப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story