காய்ச்சலை தடுக்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி


காய்ச்சலை தடுக்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி
x

காய்ச்சலை தடுக்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளூயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திருச்சியிலும் பொதுமக்கள் பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் அவதி அடைந்து வருகிறார்கள். இதையடுத்து மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பள்ளிகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட மொத்தம் 50 இடங்களில் நேற்று காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக விமானநிலையம் வயர்லெஸ் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து காய்ச்சலை தடுக்கும் விதமாக மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது. இதனை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் மற்றும் டாக்டர்கள் பார்வையிட்டனர்.


Next Story