விளாத்திகுளத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி முகாம்


விளாத்திகுளத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி முகாம்
x

விளாத்திகுளத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி முகாம் நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விளாத்திகுளத்தில், போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் விளத்திக்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் போலீசாருக்கு சிறப்பு யோகா பயிற்சி முகாம் நடந்தது. விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த முகாமில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் தமிழ் அமுதன், யோகா ஆசிரியர் ஜனார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு போலீசாருக்கு யோகாசனங்களை பயிற்சிவித்தனர். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு யோகா பயிற்சியில் விளாத்திகுளம் உட்கோட்டத்தைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு யோகாசனங்கள் செய்தனர். இதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் போலீசாருக்கு மா, பலா, வாழை என முக்கனிகளும், கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது.


Next Story