போலீசாருக்கு யோகா பயிற்சி


போலீசாருக்கு யோகா பயிற்சி
x
தினத்தந்தி 22 Jun 2023 12:45 AM IST (Updated: 22 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

தேனி

சர்வதேச யோகா தினத்தையொட்டி போலீசாருக்கு யோகா பயிற்சி கம்பம் சி.பி.யூ. மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. இதற்கு உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி தலைமை தாங்கினார். யோகா பயிற்சியாளர்கள் துரை ராஜேந்திரன், ரவிராம் ஆகியோர் தியானம், மூச்சுப்பயிற்சி மற்றும் ஆசனங்களை செய்து காண்பித்தனர். தினமும் காலையில் 10 நிமிடம் ஆசனங்கள் செய்தால் மன அமைதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதில் கம்பம் தெற்கு, வடக்கு, கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story