மாவட்ட அளவிலான யோகாசன போட்டி


மாவட்ட அளவிலான யோகாசன போட்டி
x
திருப்பூர்


முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் நடைபெற்ற

மாவட்ட அளவிலான யோகாசன போட்டியில் 500 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

யோகாசன போட்டி

நாட்டின் 74-வது குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் வகையில் முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி, ஆற்றல் பவுண்டேஷன், சிவகிரி விவேகானந்தா யோகா அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய திருப்பூர், ஈரோடு மாவட்ட அளவிலான யோகாசன போட்டி கல்லூரி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி குழு தலைவர் பி.அய்யாத்துரை தலைமை தாங்கினார். தாளாளர் மற்றும் செயலாளர் எம்.கே.பழனிச்சாமி, பொருளாளர் எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி துணை செயலாளர் வி.ஜி.ரமேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் ஆற்றல் பவுண்டேஷன் ஆற்றல் அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா பயிற்சியின் அவசியம், முக்கியத்துவம், யோகாவின் நன்மைகள், யோகா பயிற்சி மூலம் உடல், மனதை ஒருநிலைப்படுத்தி, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், யோகா கலை பயிற்சி மூலம் உடல் வலிமை, தன்னம்பிக்கை மேம்படும் வழிமுறைகள் ஆகியவைகளை பற்றி விரிவாக விளக்கி கூறினார்.

பாராட்டு சான்றிதழ்கள்

இதைத்தொடர்ந்து திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசன பயிற்சி பெற்றனர். முடிவில் யோகாசன பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கேடயம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில் கல்லூரி நிர்வாக குழு, செயற்குழு நிர்வாகிகள், பேராசிரியர்கள், இளங்கலை, முதுகலை மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் எஸ்.பி.சரவணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விவேகானந்தா யோகா அகாடமி ஒருங்கிணைப்பாளர் காமராஜ், துணை ஒருங்கிணைப்பாளர் குஜரால் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story