தங்க தேரில் யோகநரசிம்மர் பவனி
சோளிங்கரில் கார்த்திகை பெருவிழா தொடங்கியதை முன்னிட்டு தங்க தேரில் யோகநரசிம்மர் பவனி நடந்தது.
சோளிங்கர்
சோளிங்கரில் கார்த்திகை பெருவிழா தொடங்கியதை முன்னிட்டு தங்க தேரில் யோகநரசிம்மர் பவனி நடந்தது.
சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்த்திகை பெருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் 11 மாதங்கள் யோக நிலையில் இருக்கும் யோக நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பது ஐதீகம்.
கார்த்திகை பெருவிழா தொடங்கி முதல் வெள்ளியை முன்னிட்டு யோக நரசிம்மர் சுவாமி, அமிர்தவல்லி தாயார் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க தேரில் எழுந்தருளினார். மங்கள வாத்தியங்களுடன் திருக்கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.