ஆவின் தயிர் விலை உயர்வு


ஆவின் தயிர் விலை உயர்வு
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆவின் தயிர் விலை உயர்வு குறித்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் புகார் அளித்தனர்.

நீலகிரி

குன்னூர்,

நீலகிரி மாவட்ட ஆவின் நிர்வாக இயக்குனருக்கு குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ஆர்.துரை புகார் மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் மூலம் பால் பொருட்களின் விலை, மற்ற மாவட்டங்களை விட அதிகமாக உள்ளது. உதாரணமாக ஆவின் ½ லிட்டர் தயிர் ரூ.43-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கோவை மாவட்டத்தில் ½ லிட்டர் தயிர் ரூ.35-க்கு விற்பனையாகிறது. இதை ஒப்பிடும் போது லிட்டருக்கு ரூ.16 விலை அதிகமாக உள்ளது. இது நீலகிரி நுகர்வோர்களை சுரண்டும் செயலாகும். பிற மாவட்டங்களை விட நீலகிரியில் பால் மற்றும் பிற பொருட்களின் விலை கூடுதலாக இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விலை உயர்வுக்கான அரசாணை உள்ளதா என்பதை நுகர்வோருக்கு தெரிவிக்கும் கடமை ஆவின் நிறுவனத்துக்கு உள்ளது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story