பிளேடால் கையை அறுத்துக்கொண்ட இளம்பெண்
பிளேடால் கையை அறுத்துக்கொண்ட இளம்பெண்
அவினாசி
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் உஷா (வயது 24). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த அவினாசிலிங்கம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த அப்துல் சபீன் (27) என்பவரும் பணியாற்றினார். இதனால் இருவரும் நட்பாக பழகி வந்தனர்.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் உஷா கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அப்துல் சபீன் மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த உஷா நேற்று அவினாசிலிங்கேசுவரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அங்கு சாமியை தரிசனம் செய்து விட்டு கோவில் வாளகத்திற்கு வெளியே வந்தபோது திடீரென்று தான் வைத்திருந்த பிளேடால் கையை அறுத்துக்கொண்டார். இதனால் ரத்தம் வெளியேறியதால் வலி தாங்க முடியாம் அலறினார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அவினாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.