அக்னிபாத் திட்டத்தில் விமானப்படையில் சேர விண்ணப்பிக்கலாம்
அக்னிபாத் திட்டத்தில் விமானப்படையில் சேர இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்;
அக்னிபாத் திட்டத்தில் விமானப்படையில் சேர இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அக்னிபாத் திட்டம்
அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இணையவழியாக வருகிற 17-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.அக்னிவீரர்களுக்கான இணையவழித்தேர்வு அக்டோபர் 13-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. 27.6.2003 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் மற்றும் 27.12.2006 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடல்தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடல்தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது மூன்று முறைகளை கொண்டது. எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது.இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றலாம். அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணிமுடிந்தபிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணி புரிய அனுமதிக்கப்படுவார்கள். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க இந்திய விமானப்படை அக்னிபாத்தின் மேலே உள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்தவர்கள் தங்களது முழு விவரத்தை https.//form.gle/k9ynQSJ9NRJoWkoc7 என்ற லிங்கில் பதிவு செய்ய வேண்டும். எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிகஅளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.