சினிமா என் தொழில்: நான் அரசியலுக்கு சம்பாதிக்க வரவில்லை - கமல்ஹாசன் பேச்சு


சினிமா என் தொழில்: நான் அரசியலுக்கு சம்பாதிக்க வரவில்லை - கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 13 Jun 2022 1:38 PM IST (Updated: 13 Jun 2022 1:40 PM IST)
t-max-icont-min-icon

சினிமா என் தொழில், நான் அரசியலுக்கு சம்பாதிக்க வரவில்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்தம் வழங்கும் வகையில் கமல் பிலட் கம்யுன் தொடங்கி வைத்த நிகழ்வில் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-

எனக்கு வள்ளல் பட்டம் தேவையில்லை. உண்மையில் நடப்பவை பற்றிதான் நான் 'விக்ரம்' பட பாடலில் எழுதியுள்ளேன்.

நான் ஏற வேண்டிய மலை பெரிய மலை, படிப்படியாக ஏறி வருகிறேன் : என் வைராக்கியமும், வீரமும் இன்னும் குறையவில்லை. சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பது இல்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான். நான் சினிமாவை விட்டுக்கொடுக்கவில்லை, சினிமா என் தொழில்: நான் அரசியலுக்கு சம்பாதிக்க வரவில்லை என்றார்.


Next Story