மின்சாரம் மூலம் இயங்கும் புல்வெட்டும் கருவியை மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்


மின்சாரம் மூலம் இயங்கும் புல்வெட்டும் கருவியை மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்
x

மின்சாரம் மூலம் இயங்கும் புல்வெட்டும் கருவியை மானியத்தில் பெற கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 2023-24-ம் ஆண்டிற்கு 50 சதவீத மானியத்தில் மின்சாரத்தால் இயங்கும் புல்வெட்டும் கருவி 50 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. 50 சதவீத அரசு மானியத்திலும், 50 சதவீத பயனாளி பங்கு தொகை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் இதுவரை எந்த திட்டத்திலும் அரசு மானியத்தில் புல்வெட்டும் கருவியை பெறாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் 0.25 ஏக்கர் நிலத்தில் தீவன புல் பயிரிட்டு இருக்க வேண்டும். குறைந்தது 2 பசு அல்லது எருமை வளர்க்கும் விவசாயிகளுக்கு புல்வெட்டும் கருவி வழங்கப்படவுள்ளது. பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விவரங்களை பெற்று உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், செல்போன் எண், ஆதார் எண், தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story