இடஒதுக்கீடு அடிப்படையில் கல்வி பயில விண்ணப்பிக்கலாம்


இடஒதுக்கீடு அடிப்படையில் கல்வி பயில விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் படைவீரர்களை சார்ந்தவர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தொிவித்தாா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

2023-24-ம் கல்வியாண்டிற்கு முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு மருத்துவம், பொறியியல், டி.பார்ம், பி.பார்ம், பாலிடெக்னிக்கில் பட்டயப்படிப்புகள், பி.எஸ்சி. (நர்சிங்), பி.எஸ்சி. (விவசாயம்), பி.எட்., இந்திய மருத்துவம், பி.வி.எஸ்.சி., பி.எப்.எஸ்.சி., ஆசிரியர் பயிற்சி, பட்டயப்படிப்புகள், பட்டமேற்படிப்புகள் போன்ற பல்வேறு படிப்புகளில் தமிழ்நாடு அரசால் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க முன்னாள் படைவீரரை சார்ந்தோர்கள், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சார்ந்தோர் சான்று பெறுதல் வேண்டும். இணையதளம் மூலம் முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகுச்சான்று, அடையாள அட்டை, சார்ந்தோர்களின் பள்ளி இறுதிச்சான்று, மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், ஓய்வூதியம் ஒப்பளிப்பு ஆணை மற்றும் முன்னாள் படைவீரர், விதவையரின் விண்ணப்பம் ஆகியவற்றுடன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக exwelvpm@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து சான்று பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண் 04146-220524-ல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.


Next Story