மானியத்தில் புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
மீன் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்து மீன் வளர்ப்பு செய்யும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
மீன் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்து மீன் வளர்ப்பு செய்யும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள்
புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்திட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஒரு ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.7 லட்சத்தில் பொது பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம், பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்திட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஒரு ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.7 லட்சத்தில் பொதுபயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.2 லட்சத்து 80 ஆயிரமும், பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மானியமுமாக வழங்கப்படும்.
நன்னீர்மீன் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஒரு ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவினத் தொகை ரூ.4 லட்சத்தில் பொது பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியம் ரூ.ஒரு லட்சத்து 60 ஆயிரம், பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
பயோ பிளாக் குளங்கள் அமைத்தல்
சிறிய அளவிலான பயோ பிளாக் குளங்கள் அமைத்தல் திட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 1 அலகு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செமீன் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்து மீன் வளர்ப்பு செய்யும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.லவினத் தொகை ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் பொது பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியம் ரூ.3 லட்சம், பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கலாம்
இலக்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படும் ஆயின் பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பயன்பெற விரும்புபவர்கள் உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், வேலூர் அலுவலகத்தை அணுகலாம். 0416-2240329 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். adfifvellore@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு உரிய படிவத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.