திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்
நெல்லை மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.
திருக்குறள் முற்றோதல் போட்டி நெல்லை மண்டல தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனரால் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் 1330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தல், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த பரிசு பெற்றவர்கள் மீண்டும் போட்டியில் பங்கேற்க முடியாது.
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ- மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மண்டல தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பத்தினை நேரில் அல்லது இணையதளம் மூலமாகவோ பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய நாள் வருகிற 20-ந் தேதி ஆகும். இணையதள முகவரி www.tamilvalarchithurai.com ஆகும். இது தகவலை, கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.