நலத்திட்ட உதவிகள் பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்


நலத்திட்ட உதவிகள் பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

கடலூர்

கடலூர்

தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இ-சேவை தளம் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்களுக்கு தளம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் விண்ணப்பம், மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறுவதற்கான விண்ணப்பம், திருமண உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் மாதாந்திர பராமரிப்பு தொகை பெறுவதற்கான விண்ணப்பம் ஆகிய 5 திட்டங்கள் முதற்கட்டமாக இணையதளம் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த சேவைகளை பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது http://tnesevai.tn.gov.in/citizen/Registration.aspxஎன்ற இணையதளத்தினை இம்மாதம் முதலே பயன்படுத்தி விண்ணப்பிக் கலாம். வருகிற ஆகஸ்டு முதல் இந்த திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக மட்டுமே பெறப்படும். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொலைபேசி எண் 04142 284415 தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப் படுகிறது.

ஆகவே கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட 5 திட்டங்களில் பயன்பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story