கட்டிடம் கட்ட அனுமதி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கட்டிடம் கட்ட அனுமதி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டிடம் கட்ட அனுமதி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டிடம் கட்ட அனுமதி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஒற்றை சாளர முறை

மயிலாடுதுறை மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நகர் ஊரமைப்புத்துறையில் பொதுமக்கள் எளிதாக மனைப்பிரிவு அனுமதிபெறும் வகையில் கடந்த ஜூன் மாதத்தில் ஒற்றை சாளர முறையில் விண்ணப்பிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.அதேபோல் தற்போது கட்டிடங்கள் முழுமைத்திட்டம் மற்றும் விரிவு அபிவிருத்தி திட்டம் நிலப்பயன் மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களும் ஒற்றை சாளரமுறையில் ஆன்லைனில் விண்ணபிக்கும் நடைமுறை கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்ட அனுமதி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் சரிபார்ப்பு படிவ ஆவணங்களுடன் www.onlineppa.tn.gov.in என்ற இணையதள முகவரில் விண்ணப்பம் செய்து எளிதாக ஒப்புதல் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story