விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாக உள்ள 56 விற்பனையாளர்கள் மற்றும் 2 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbpblr.net என்ற இணையதளம் வழியாக மட்டுமே 14.11.2022 அன்று மாலை 5.45 மணிவரை பதிவு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல நூறு விண்ணப்பதாரர்கள் தொலைபேசி மூலம் பல்வேறு சந்தேகங்களை தெளிவுப்படுத்திட அழைப்பதால் கூட்டுறவுத்துறையின் சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. TN COOP DEPT என்ற யூ-டியூப் சேனலில் உள்ள வீடியோ (http://www.youtube.com/watch?v=G6c5e2ELJDS) மூலம் விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர்கள், கட்டுநர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் தேவையான ஆவணங்கள் குறித்து தெரிந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.