வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுகிறது. இந்த திட்டத்திற்கு மண்டல அளவில் திருச்சி, கரூர், மதுரை, தேனி, நாமக்கல் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பணி செய்ய ஏதுவாக ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்கள் அல்லது தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், பண்ணை சார் மற்றும் பண்ணை சாரா துறைகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வி தகுதி, அனுபவம் மற்றும் நிபந்தனைகள் இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களை https://www.tnrtp.org என்ற இணையதள முகவரியில் வருகிற 27-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story