மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மானியம் பெற்று பயன்பெறலாம்


மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மானியம் பெற்று பயன்பெறலாம்
x

மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மானியம் பெற்று பயன்பெறலாம் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீன் வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டு விவசாயிகளின் வருமானத்தை 3 மடங்கு உயர்த்திடவும், பொதுமக்களுக்கு மீன்புரத சத்தினை எளிதில் கிடைத்திட வழிவகை செய்திடவும் ஏதுவாக குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் வழங்குதல், சிறிய அளவிலான மீன் விற்பனை நிலையம் அமைத்து அலங்கார மீன்வளர்ப்பு திட்ட மானியம், கொல்லைப்புற அலங்கார மீன்வளர்த்தெடுக்கும் திட்டம் (கடல், நன்னீர்), புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம், நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம், புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம், சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்குதல் திட்டம் ஆகிய திட்டங்கள் பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22-ம் ஆண்டின்படி பொதுப்பிரிவு-40 சதவீத மானியம் மற்றும் மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோருக்கு 60 சதவீத மானியம் வழங்கிட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2022-23-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவளநலத்துறை அமைச்சரின் அறிவிப்பில் பண்ணைக்குட்டை வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்களுக்கு 50 சதவீத மானியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்காணும் திட்டங்களில் பயனடைய விரும்பும் மீன் வளர்ப்பு விவசாயிகள் உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், எண் 10, முதல் தளம், நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி, விழுப்புரம் 605 401, தொலைபேசி எண்: 04146- 259329 என்ற முகவரியில் அலுவலக வேலைநாட்களில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story