கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம்


கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம்
x

சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம் என்று தேனி கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு திரையரங்கு (ஒழுங்குமுறைகள்) சட்டம்-1955 மற்றும் தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை விதிகள் 1957-ன்படி மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் புதிய திரைப்படங்கள் வெளியிடும்போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூல் செய்தால் பொதுமக்கள் புகார் செய்யலாம். இதுபோன்ற புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது 04546-261093 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story