நேர்முக தேர்வு அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்
நியாய விலை கடை விற்பனையாளர் காலி பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான அனுமதி சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியாய விலை கடை விற்பனையாளர் காலி பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான அனுமதி சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனையாளர் பணியிடம்
கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பல்வேறு வகையான கூட்டுறவுச்சங்க நியாய விலை கடைகளில் காலியாகவுள்ள 75 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. இவற்றில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 14-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை திருப்பத்தூர் விஜயசாந்தி ஜெமின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடைபெறவுள்ளது.
மேற்படி நேர்முகத் தேர்வுக்கான அனுமதி சீட்டுகளை திருப்பத்தூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதள வழி http://www.drbtpt.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முக அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் கண்டிப்பாக நேர்முகத் தேர்விற்கான அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மூல சான்றிதழ்கள்
மேலும் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்துள்ள அதே புகைப்படத்துடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், அனைத்து மூல சான்றிதழ்கள், அவற்றின் 2 ஒளிநகல்கள் ஆகியவற்றை சுய சான்றொப்பத்துடன் கொண்டு வரப்பட வேண்டும்.
அதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் திருப்பத்தூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தை 7338749643 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது drbtpt.rcs@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.