நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும்


நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும்
x

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் என விருதுநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

விருதுநகர்


நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் என விருதுநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

நிறைவு விழா கூட்டம்

விருதுநகர் தேசபந்து திடலில் விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன் தலைமையில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை கொண்டு வந்தவர் பேராசிரியர் அன்பழகன். மேலும் தமிழகத்தில் 51.7 சதவீதம் உயர்கல்விக்கு அடித்தளமிட்டவர். அனைத்து தரப்பினரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டக்கூடிய வகையில் அவரது செயல்பாடு அமைந்துள்ளது. நடந்து முடிந்த ஒலிம்பியாட் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தவர் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

அடையாளம் காட்டியவர்

இன்று அவர் விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு நானும் ஒரு சிறு காரணமாக அமைந்துள்ளேன். அவர் கருணாநிதியின் மறுவடிவமாக இளைஞர்களை வழி நடத்துபவராக உள்ளார். அவரை நமக்கு அடையாளம் காட்டியவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற அனைவரும் அயராது உழைக்க வேண்டும். எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

குறை சொல்ல முடியவில்லை

கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் வேறு எந்த குறையும் சொல்ல முடியாத நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனதை சொல்லி கொண்டிருக்கின்றனர். ஆர்ப்பாட்டம் நடத்திய கட்சியினர் மக்களின் நலனுக்காக ஏதாவது பேசினார்களா? என்றால் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு வேறு எந்த குறையும் சொல்ல முடியாத நிலை உள்ளது. வேறு வழி இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், மாணவர் அணி அமைப்பாளர் ராஜகுரு, இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் தனபாலன் நன்றி கூறினார்.


Next Story