இளம் பெண் கர்ப்பம்; 2 பேருக்கு வலைவீச்சு
மயிலாடுதுறையில் இளம் பெண் கர்ப்பம்; 2 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கிள்ளியூர் கன்னங்குடியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவர் 19 வயது பெண்ணை கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து வந்தார். இந்தநிலையில் அய்யாகண்ணு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2022-ம் ஆண்டு இவர் மற்றொரு 19 வயது பெண்ணுடன் நெருங்கி பழகி வந்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். இதனை அறிந்த அய்யாக்கண்ணு அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து விட்டு தலைமறைவாகிவிட்டார். இந்தநிலையில் திருக்கடையூர் அருகே மணல்மேடு கிராமத்தை சேர்ந்த கலைவாணன் மகன் பிரதீப்ராஜ் என்பவர் ஏற்கனவே கர்ப்பமான அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் பிரதீப்ராஜூம் தலைமறைவாகிவிட்டார். கடந்த டிசம்பர் 18-ந்தேதி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அமுதாராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அய்யாக்கண்ணு, பிரதீப்ராஜ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.