இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
குன்னம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புதுவேட்டைக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் ராஜு இவரது மகள் தெய்வானை (வயது 22) இவர் டெய்லரிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நீண்ட காலமாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனம் உடைந்த தெய்வானை நேற்று இரவு மொட்டை மாடியில் தூங்க செல்வதாக கூறி அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காலையில் பெற்றோர்கள் தெய்வானையை கூப்பிட்டு பார்த்தும் எழுந்து வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மேலே சென்று பார்த்தபோது தெய்வானை வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்து குடித்து இறந்து போனது தெரிய வந்தது.இது குறித்து தெய்வானையின் தாயார் பச்சையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து தெய்வானை உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார் மேலும் தெய்வானை இறந்தது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்.