சுடுகாட்டில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


சுடுகாட்டில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x

ஆதரவற்ற நிலையில் இளம்பெண் சுடுகாட்டிற்கு சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சித்துடையார் காலனி தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகள் மூக்காயி(வயது 37). இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் வேல்விமங்கலம் காலனித் தெருவை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மணிகண்டன்(6) என்கிற மகன் உள்ளார். இவர் பெரும்பாண்டி கிராமத்தில் உள்ள மூக்காயி அக்கா வீட்டில் உள்ளார். மூக்காயி சிறு வயது முதல் மனநிலை பாதிக்கப்பட்டு மாத்திரை சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 6 மாதங்களில் கணவர் வாழ பிடிக்காமல் அனுப்பி விட்டதாக தெரிகிறது. இதனால் இவரது தந்தை இல்லாத நிலையில் தனது தயார் வீடான சித்துடையாரில் வசித்து வந்தார்.

அவரது தாய் தற்போது கேரளாவில் கூலி வேலை பார்த்து வருவதால் இவருக்கு உறவினர்கள் சிலர் உணவு கொடுத்து பராமரித்து வந்துள்ளனர். இவர் தாய், தந்தை ஆதரவற்ற நிலையில் சரியாக உணவுகள் இன்றி பசியால் வாடி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டுக்குச் சென்ற இவர் தனது தலையில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் முகம், தலை எரிந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குவாகம் போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதரவற்றதால் சுடுகாட்டிற்கு சென்று இளம் பெண் தன்னைத் தானே எரித்து கொண்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story