இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரை சேர்ந்தவர் பழனி மகள் சினேகா (வயது 21). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சினேகா உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story