இளம்பெண் திடீர் சாவு
போளூர் அருகே இளம்பெண் திடீரென இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தாயார் போலீசில் புகார் அளித்தார்.
போளூர்
போளூர் அருகே இளம்பெண் திடீரென இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தாயார் போலீசில் புகார் அளித்தார்.
திருமணம்
போளூர் அருகே கெங்கவரம் கிராமத்தில் வசிப்பவர் விருத்தாம்பாள். இவரது மகள் கனிமொழிக்கும் (வயது 23), பெரும்பாக்கத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் மகன் விவசாயி அருணுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் நித்தீஷ் என்ற மகன் உள்ளார்.
திருமணம் ஆனதில் இருந்து கனிமொழியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் அருண், அருணின் அண்ணன் ஆனந்தன், ஆனந்தனின் மனைவி ஈஸ்வரி ஆகியோர் கனிமொழியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் தாய் வீட்டுக்கு போ என கூறியதாக தெரிகிறது. அவர் தாய்வீட்டுக்கு வந்தபோது விருத்தாம்பாள் அவரை சமாதானப்படுத்தி மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
திடீர் சாவு
இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி இரவு கனிமொழி வாந்தி, பேதி ஏற்பட்டு படுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த விருத்தாம்பாள் அங்கு விரைந்து சென்று பார்த்த போது, கனிமொழி சுயநினைவினறி இருத்தார்.
உடனடியாக போளூரில் தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து மகள் கனிமொழியின் சாவில் சந்தேகம் உள்ளது. இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாயார் விருத்தாம்பாள் போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்பிரகாஷ் வழக்குப்பதிவு செய்தார்.
உதவி கலெக்டர் விசாரணை
மேலும் திருமணமாகி 4 ஆண்டுகளில் கனிமொழி திடீரெனம இறந்ததால், இதுகுறித்து செய்யாறு உதவி கலெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.