Normal
வேடசந்தூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வேடசந்தூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல்
வேடசந்தூர் சந்தைபேட்டையை சேர்ந்தவர் சந்திரன். பெயிண்டர். இவரது மனைவி நித்யா (வயது 27). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் நித்யாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தார்.
இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நித்யாவுக்கு திருமணம் ஆகி 2 வருடங்களே ஆவதால் அவரது சாவு குறித்து பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story