கச்சிராயப்பாளையம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது


கச்சிராயப்பாளையம் அருகே  விவசாயியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
x

கச்சிராயப்பாளையம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சச்சின் (வயது 27). இவர் சம்பவத்தன்று கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பந்து எதிர்பாராமல் அதேஊரை சேர்ந்த விவசாயி மாரிக்கண்ணு என்பவருக்கு சொந்தமான ஆடு மீது பட்டு விட்டது. இதைபார்த்த மாரிக்கண்ணு ஏன் அலட்சியமாக பந்து விளையாடுகிறாய் என சச்சினை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த சச்சின் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரிக்கண்ணை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் முகம் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, சச்சினை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story