குற்றச்செயல்களுக்கு காரணமான போதை பழக்கங்களில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்


குற்றச்செயல்களுக்கு காரணமான போதை பழக்கங்களில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும்   போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்
x

குற்றச்செயல்களுக்கு காரணமான போதை பழக்கங்களில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும், என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கேட்டுக்கொண்டார்

தூத்துக்குடி

கயத்தாறு:

குற்றச்செயல்களுக்கு காரணமான போதை பழக்கங்களில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும், என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கேட்டுக்கொண்டார்.

விழிப்புணர்வு கூட்டம்

கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் காவல்துறை சார்பில், விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குற்றச்சம்பவங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்க வழக்கம் உள்ளவர்கள் தான் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது தெரிகிறது. இதை தவிர்க்கும் வகையில், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் மாவட்டம் முழுவதும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

குற்றங்களுக்கு காரணம் என்ன? குற்றச்செயலில் ஈடுபடுபவரின் குடும்பம் எத்தகைய பாதிப்புகளை சந்திக்கிறது? குற்றச்செயல்கள் தடுக்கும் நடவடிக்கையில் எவ்வாறு ஈடுபடுவது? பெண்களுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு தடுப்பது? குற்றங்கள் நடப்பதற்கு முன்பு காவல்துறையை எவ்வாறு அணுகுவது? போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

எனவே, கஞ்சா போன்ற போதை பழக்கங்களில் இருந்து இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் விடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உறுதிமொழி

பின்னர் கூட்டத்தில் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி திலீப், பால் ஆறுமுகம், காசிலிங்கம், மாரியப்பன் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் கணபதி, முத்துலட்சுமி கிருஷ்ணசாமி, சரோஜா பால்ராஜ், மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story