விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை
விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை
திருவாரூர்
முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் மகள் பிரியா (வயது24). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story