வடமதுரையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


வடமதுரையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 Aug 2023 2:30 AM IST (Updated: 23 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

வடமதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 29). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அட்சயலட்சுமி (23). முதுகலை பட்டதாரி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நவநீதகிருஷ்ணனின் குடும்பத்தினர் அட்சயலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அப்போது பெற்றோர் வீட்டிற்கு சென்று நகை, பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி வருமாறு அவரை வற்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அட்சயலட்சுமி தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் மாலை வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அட்சயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அட்சயலட்சுமியின் தாய் சசிகலா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அட்சயலட்சுமிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Next Story