சிறுமிக்கு பாலியல் தொல்லை 'போக்சோ' வழக்கில் வாலிபர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை  போக்சோ வழக்கில் வாலிபர் கைது
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை ‘போக்சோ’ வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே உள்ள புனவாசல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோபி (வயது 25). ரைஸ் மில் கட்டுமான பணியில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். வெளியூரில் வேலை பார்த்து வந்த இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story