நீர்வீழ்ச்சியில் உற்சாக குளியல் போடும் இளைஞர்கள்
தெள்ளையில் புதிதாக உருவான நீர்வீழ்ச்சியில் இளைஞர்கள் உற்சாக குளியல் போட்டனர்.
வேலூர்
வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த துத்திகாடு ஊராட்சிக்குட்பட்ட தெள்ளை மலை கிராமத்தில் புதிதாக நீர்வீழ்ச்சி உருவாகி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக, அங்குள்ள மலையில் நீரூற்று ஏற்பட்டு தற்போது நீர்வீழ்ச்சியாக தண்ணீர் கொட்டுகிறது. நாளுக்கு நாள் தண்ணீர் அதிகளவில் வருவதால், பொதுமக்கள் அங்கு சென்று வியப்புடன் பார்வையிடுவதுடன், அதில் குளிக்கவும் செய்கின்றனர்.
அமிர்தி நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுற்று வட்டார இளைஞர்கள் இந்த தெள்ளை நீர்வீழ்ச்சிக்கு வந்து உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர். தற்போது விடுமுறை நாட்களில் இயற்கையான சூழலில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க சிலர் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்து விட்டு செல்கின்றனர்.
Related Tags :
Next Story