மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வாலிபர் கைது


மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வாலிபர் கைது
x

ஒடுகத்தூர் அருகே மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள காப்பு காட்டில் வனவிலங்குகளை வேட்டையாடி பொது மக்களுக்கு கறியாக வினியோகம் செய்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனச்சரகர் இந்து மற்றும் கிருஷ்ணன் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர்கள் ஒடுகத்தூர் மற்றும் கீழ் கொத்தூர் பருவதமலை காப்பு காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் மானை வேட்டையாடி கறி சமைத்துக் கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் கீழ்கொத்தூர் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மகன் வினோத் (வயது 19) என்பது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் வினோத் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story