பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது


பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
x

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தோவாளை தாழக்குடி குலாளர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 32). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாரியப்பன் பணியில் இருந்த போது, கிருஷ்ணன்கோவில் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ஆதிகேசவன் (19) மற்றும் அவரது நண்பர்கள் சந்தோஷ், பாலாஜி மற்றும் ஆறுமுகம் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்ப அங்கு வந்தனர்.

அப்போது ஆதிகேசவன் பெட்ரோல் நிரப்பும் எந்திரத்தின் அருகே இருந்த ரூ.130-ஐ நைசாக திருடியதாக தெரிகிறது. இதனை கண்ட மாரியப்பன், ஆதிகேசவனை கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த ஆதிகேசவன் உள்பட 4 பேர் சேர்ந்து மாரியப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆதிகேசவன் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடிவருகின்றனர்.


Next Story