பெருந்துறையில் மனைவியை தாக்கிய வாலிபர் கைது
பெருந்துறையில் மனைவியை தாக்கிய வாலிபர் கைது
பெருந்துறை
பெருந்துறை மேக்கூர் முதலியார் வீதியை சேர்ந்தவர் குழந்தைவேலு. அவருடைய மகன் தமிழரசு (வயது34). விசைத்தறி பிட்டர். இவருக்கும் பழனியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருடைய மகள் கவுசல்யாவுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மற்றும் 5 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர்.
தமிழரசுவுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார். இதனால் கவுசல்யா தனது மகன்களுடன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்தார். இங்கு நேற்று காலை மகன்களை பார்ப்பதற்காக தமிழரசு சென்றுள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்து கவுசல்யாவை தமிழரசு அடித்து உதைத்துள்ளார். இது குறித்து அவர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசுவை கைது செய்தனர்.