மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கிய வாலிபர் கைது


மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கிய வாலிபர் கைது
x

கபிஸ்தலம் அருகே மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது மாமியாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது மாமியாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

உருட்டுக்கட்டையால் தாக்குதல்

கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் புதுத்தெருவில் வசிப்பவர் அன்பரசன்(வயது32). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜீவிதா. இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ஜீவிதா கபிஸ்தலம் போலீசில் புகார் கொடுத்தார். அந்தபுகாரில், தனது கணவர் அன்பரசன் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்குவந்து தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியும், உனது வீட்டில் இருந்து என்ன கொண்டு வந்தாய் என கூறியும் உருட்டுக்கட்டையால் தாக்கினார். அப்போது அங்கிருந்த எனது மாமியார் இந்திராவும் என்னை தாக்கினார் என தெரிவித்திருந்தார்.

வாலிபர் கைது

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜீவிதாவின் மாமியார் இந்திராவை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story