கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர் கைது
ராஜாக்கமங்கலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர் கைது
கன்னியாகுமரி
ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் கன்னக்குறிச்சி நடுவூர் ஊரில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியலை கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி இரவு மர்ம நபர் உடைத்து அதிலிருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றார். இதுகுறித்து ஊர் தலைவர் ஸ்ரீதர் (வயது51) கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற வாலிபர் கணபதிபுரம் புதூர் பகுதியை சேர்ந்த செல்லசாமி மகன் மகேஷ் (35) என்பது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று மகேஷ் வீட்டில் இருப்பதை அறிந்த ராஜாக்கமங்கலம் போலீசார் விரைந்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story